தாயின் கண்முன்னே துடிதுடிக்க காதல் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கணவன்

Report Print Vijay Amburore in இந்தியா
323Shares

திருப்பூரில் குடும்பத்தகராறு காரணமாக காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரமேஷ்குமார் (35), 12 வருடங்களுக்கு முன்பாக பிரியா(32) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ரமேஷ்குமார் மனஅழுத்ததில் இருந்துவந்துள்ளார். மேலும் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரியா கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு தன்னுடைய குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவியின் தாய் வீட்டிற்கு சென்ற ரமேஷ்குமார், பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம் எனக்கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு ரமேஷ்குமார், அவருடைய தாய் மற்றும் பிரியா ஆகியோர் அமர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர்.

அந்த சமயத்தில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ்குமார், அங்கிருந்த கத்தியை எடுத்து பிரியாவின் வயிற்றில் சரமாரியாக குத்தி தரையில் சாய்த்துள்ளார். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

கதறல் சத்தம் கேட்டு குவிந்த அக்கம்பக்கத்தினர், ரமேஷ்குமாரை சுற்றிவளைத்து பிடித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ரமேஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்