இந்தியாவில் குடும்பத்தினருக்கே புகைப்பிடிக்காத பழக்கம் இல்லாத நிலையில், தற்போது அந்த குடும்பத்தில் இருக்கு பெண் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசுபடுதல் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அங்கிருக்கும் மக்கள் பலருக்கும் பல்வேறுவிதமான நோய் வருகின்றன.
இந்நிலையில் கலிபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு புற்றுநோயின் நான்காம் கட்டம் இருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர்கள் குடும்பத்தில் யாருக்குமே புகைபிடிக்கும் பழக்கம் கிடையாது, அதுமட்டுமின்றி அந்த பெண்ணிற்கு புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது, அப்படி இருக்கையில் இப்படி ஒரு, அதுவும் நான்காம் வகை நுரையீரல் புற்றுநோய் வரும் என்று பலரும் இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்த நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை மார்பக மருத்துவர் அரவிந்த்குமார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணமே காற்று தான், காற்றில் இருக்கும் மாசுபாடு தான், முன்பெல்லாம் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் புகைப்பழக்கமே இல்லாதவர்களுக்கு தான் காற்று மாசுபாடு காரணமாக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் தற்போது முதல் முறையாக 30 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண்ணிற்கு நான்காம் கட்ட நுரையீரல் புற்றுநோய் என்று கண்டுபிடிக்கபட்டுள்ளதால், அதை சரி செய்வது கடினம் என்றும், இதற்காக அவர் அறுவை சிகிச்சை, chemotherapy, targeted therapy மற்றும் immunotherapy ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் அங்கிருக்கும் காற்றை சுவாசித்தால் நாள் ஒன்றிற்கு 5 முதல் 20 சிகரெட்டுகள் புகைப்பது சமம் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.