இணையத்தில் கொண்டாடப்படும் இரண்டு இளம்பெண்கள்: என்ன காரணம் தெரியுமா?

Report Print Vijay Amburore in இந்தியா
240Shares

இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து-முஸ்லீம் ஒரே பாலின தம்பதியினரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட அஞ்சலி சக்ரா என்கிற இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண்ணும், பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட சுந்தாஸ் மாலிக் என்கிற முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

தற்போது நியூயார்க்கில் வசித்து வரும் இந்த ஜோடியின் படங்களை அவர்களின் புகைப்படக் கலைஞர் சரோவர் அகமது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நியூயார்க் லவ் ஸ்டோரி” என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது 49,000 லைக்குகள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரால் பகிரப்பட்டுள்ளது.

பாலினம் மற்றும் மதத்தின் தடைகளை இந்த ஜோடியினர் உடைத்துவிட்டதாக இணையதளவாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்