திருமணமான 40 நாளில் ஆடிக்கு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி.. பின்னர் கணவனுக்கு வந்த அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஆடிக்கு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (35), விவசாயி.

இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கவுசல்யா (19) என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு முன்பு கவுசல்யாவும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கவுசல்யாவில் விருப்பத்தை மீறி அவருக்கு பாக்கியராஜுடன் அவர் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கவுசல்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். தாய் வீட்டுக்கு சென்ற கவுசல்யா தனது காதலனை சந்தித்து பேசியுள்ளார் .

அப்போது இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்து உள்ளனர். இதைத்தொடந்து இருவரும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.

தனது மனைவி காதலனுடன் சென்றது குறித்த செய்தியை அறிந்த பாக்கியராஜ் மிகுந்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.

இதனால் வீட்டில் இருந்த வயல் தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்