சட்டப்பிரிவு 370 நீக்கத்தின் விளைவு..! நேற்று இரவு காஷ்மீரில் என்ன நடந்தது.? கசிந்தது தகவல்

Report Print Basu in இந்தியா

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பிராந்தியத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 வதை நீக்கும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. எதிர்காட்சிகள் இது ஜனநாயக படுகொலை என விமர்சித்தனர், இந்த மசோதா மூலம் காஷ்மீர் தன்னாட்சி நிலையை இழந்துள்ளது.

மசோதா நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, நேற்று இரவு தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் பயங்கர கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அரை மணி நேரம் தொடர்ந்த கல் வீச்சு தாக்குதல், பின்னர் ராணுவத்தினரால் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருபுறமும் காயங்கள் எதுவும் இல்லை என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக, சில தினங்களுக்கு முன் அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது என்று பொதுவெளியில் தெரிவித்துவிட்டு காஷ்மீரில், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பிராந்தியம் முழுவதும் ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இணையம் தடைசெய்யப்பட்டது, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது, முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் மூத்த அரசியல் தலைவர் சஜாத் லோன் ஆகியோரை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்