46 ஆண்டுகளாக....! சுஷ்மா குறித்து காதல் கணவர் உருக்கம்

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குறித்து அவரது காதல் கணவர் ஸ்வராஜ் கெளஷல் எழுதிய கடிதம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதில் அவர், இனிமேல் தேர்தலில் போட்டியில்லை என்ற உனது முடிவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

மில்கா சிங் கூட ஓடுவதை நிறுத்திய ஒரு காலம் வந்ததை நினைவுபடுத்தி பார்க்கிறேன். இந்த மாரத்தான் 1977ல் தொடங்கியது என நினைக்கிறேன்.

அதற்குள் 41 ஆண்டுகள் ஆகிவிட்டது. கட்சி அனுமதிக்காத 1991, 2004ம் ஆண்டுகள் தவிர மற்ற அனைத்து முறையும் தேர்தலில் நீ போட்டியிட்டுவிட்டாய்.

உன்னுடைய 25 வயதில் இருந்து தேர்தல் ரேஸில் பங்கேற்று இருக்கிறாய். 41 ஆண்டுகளாக தேர்தல்களை எதிர்த்துப் போராடுவது ஒரு மாரத்தான் என்றே சொல்லலாம்.

ஆனால் மேடம்.... கடந்த 46 ஆண்டுகளாக நான் உன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

எனக்கு ஒன்றும் இப்போது 19 வயது கிடையாது. நானும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

சுஷ்மாவின் மறைவை அடுத்து இந்தப் பதிவு தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர், சுஷ்மா ஸ்வராஜ்.

டெல்லி சட்டக் கல்லூரியில் படித்தபோது அவரின் சக மாணவர் ஸ்வராஜ் கௌஷல். அப்போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தியாவில் எமர்ஜென்சி என்கிற அவசர நிலை கொண்டுவரப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில்தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் அரசியல்ரீதியாக எதிரெதிர் கொள்கைகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் காதலால் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்