மது அருந்தியவரிடம் மோசமாக நடந்து கொண்ட 5 இலங்கை தமிழர்கள் கைது.. அவர்கள் செய்த தவறு என்ன?

Report Print Raju Raju in இந்தியா
508Shares

தமிழகத்தில் மது அருந்தியவரை தாக்கி பணத்தை திருடிய ஐந்து இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் சித்திக் (35). இவர் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடையில், மது வாங்கிக் கொண்டு சாலையோரம் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, ஐந்து பேர் சூழ்ந்து சித்திக்கை பணம் கேட்டு தாக்கினர்.

பின்னர் அவரிடமிருந்த, 150 ரூபாய் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு வாகனத்தை திருடிச் சென்றனர்.

இது குறித்து, சித்திக் அளித்த புகார்படி பொலிசார் விசாரித்ததில் நாகியம்பட்டியிலுள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து நேற்று, அந்த முகாமைச் சேர்ந்த பூவேந்தன் (23) அர்ஜூன் (20), பார்த்திபன் மகன் அர்ஜூன் (20) உதயகுமார் மகன் மோகன்ராஜ் (24) நாகராஜாவின் 18 வயது மகன் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்