வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவு: பிரதமர் மோடி

Report Print Basu in இந்தியா

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் மோடி.

முக்கிய அம்சங்கள்
  • லடாக் மூலிகை வளங்களை சந்தைப்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவோம்.
  • ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும்
  • லடாக்கில் மிகப்பெரிய சூரிய மின்சக்தி மையம் அமைக்க வாய்ப்புள்ளது.
  • ஜம்மு காஷ்மீர் தயாரிப்புகளை பிரபலப்படுத்த வேண்டுமென அனைத்து தொழில் நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
  • தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திலிருந்து ஜம்மு காஷ்மீரை விடுவிப்போம், மேலும் அம்மக்கள் பிரிவினைவாதத்தை தோற்கடிப்பார்கள் என நம்புகிறேன்.
  • மெதுவாக சூழல் இங்கு சகஜ நிலைக்குத் திரும்பும் பிரச்சினைகளும் முடியும் என்பதை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உறுதிபடக் கூறுகிறேன்.
  • இந்த மாற்றம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்யும். இங்கு மட்டுமல்ல இதன் வளர்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் நன்மை பயக்கும்.
முதல் இணைப்பு- 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுகிறார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே எத்தனை மணிக்கு, எதன் வழியாக உரையாற்ற உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்று 8ம் திகதி நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். பிரதமரின் உரையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும் பிரதமர் மோடி கூட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அகில இந்திய வானொலி வழியாக இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார் என தகவல் வெளியான நிலையில், தற்போது, இரவு 8 மணிக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினை குறித்து மக்களுடன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் உரைக்கு முன் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்