இளைஞருடன் ஜாலியாக சுற்றிய ஆசிரியை.. செல்போனில் பதிவான புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஆபாச படங்களை வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால், மனமுடைந்த தனியார் பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (47). இவரது மகள் பிரீத்தா (22). இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த பிரபு செல்வம் (27) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது வீட்டிற்கு தெரிய வரவே, பெற்றோர் பிரீத்தாவை கண்டித்துள்ளனர்.

ஆனாலும், காதல் ஜோடி அவ்வப்போது சந்தித்து பல்வேறு இடங்களில் சுற்றி ஜாலியாக தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரீத்தா, பிரபு செல்வத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு பிரபுசெல்வம் 10 ஆயிரம் கொடுத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி, ஆரம்பத்தில் பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் திருமணம் செய்யவில்லை. தொடர்ந்து இதுபோன்று பலமுறை பிரீத்தாவிடம் பணம் கேட்ட நிலையில் கடந்த 2ம் திகதி இது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பிரபுசெல்வம், பணம் கொடுக்காவிட்டால், நாம் நெருக்கமாக எடுத்து கொண்ட ஆபாசப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார்

காதலன் கூறியதைக் கேட்டு மனமுடைந்த பிரீத்தா, கடந்த 2ம் திகதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரீத்தா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து பிரபு செல்வத்தை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்