வெளியூருக்கு கணவர் அடிக்கடி செல்வார்.. என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோ என அவனிடம் கூறினேன்.. மனைவியின் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் உதயபாலன்(36) தொழில் அதிபர். இவரது மனைவி உதயலேகா.

தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் திடீரென புயல் வீச தொடங்கிய நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் திகதி உதயபாலன் தனது வீட்டு படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதாவது உதயலேகா தனது காதலன் பிரபாகரனுடன் சேர்ந்து கணவரை கொன்றது தெரியவந்தது.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், எனது கணவரின் தந்தையும், எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள்.

எனது தந்தையும், கணவரின் தந்தையும் பேசி எங்களது திருமணம் வெகு சிறப்பாக நடந்தது. இனிதாக நடந்த எங்கள் குடும்ப வாழ்க்கையில் கால் டாக்சி ஓட்டுனர் பிரபாகரன் ரூபத்தில் புயல் வீசியது.

எனது கணவர் ஜாக்குவார் கார் வைத்திருந்தார். எனது கணவர் அடிக்கடி வெளியூருக்கு போகும் சமயத்தில் பிரபாகரனின் கால் டாக்சியில் நான் வெளியில் தனியாக செல்வேன்.

அவர் என்னோடு அன்பாக பழகியதோடு அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து செல்வார். அவர் தனது குடும்பத்தோடு வறுமையில் வாடுவதாக வருத்தப்படுவார்.

நான் அவருக்கு பண உதவி செய்துள்ளேன். அவர் என் மீது ஆசைப்பட்டார். என்னை வைத்து அவர் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்.

பிரபாகரன் வீட்டுக்கு வந்து செல்வது எனது கணவர் உதயபாலனுக்கு பிடிக்கவில்லை. என் மீது சந்தேகப்பட்டதோடு என்னை விவாகரத்து செய்யப் போவதாக மிரட்டினார்.

இதனால் எங்கள் வீட்டில் சந்தோஷம் தொலைந்து போனது. தினமும் மனக்கஷ்டத்தால் அவதிப்பட்டேன். பிரபாகரனை வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறியும் அவர் வீட்டுக்கு தொடர்ந்து வந்தார்.

எனது கணவர் திட்டியதால் புண்பட்ட எனது மனதுக்கு ஆறுதலாக பேசுவார்.

எனது கணவரை கொலை செய்துவிடலாம் என்று பிரபாகரன் கூறினார். ஆனால் அவரது கொலை திட்டத்தை நான் ஏற்கவில்லை.

எனது மனக்கஷ்டத்தை பிரபாகரன் அவருக்கு சாதகமாக பயன்படுத்தினார். எனது கணவரை கொலை செய்யப்போவதாக மீண்டும் மீண்டும் கூறி வந்தார். ஒரு கட்டத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று கூறிவிட்டேன். நான் எனது குழந்தைகளோடு காரைக்காலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு போய் விட்டேன்.

நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது கணவர் தனியாக இருந்ததை பயன்படுத்தி அவரை பிரபாகரன் தீர்த்துக்கட்டி விட்டார் என கூறினார்.

இதோடு நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு உதயபாலன் அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை பிரபாகரன் எடுத்து சென்றதும் தெரியவந்தது

இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து செய்து தீவிர விசாரணை நடத்தி இந்த கொலை தொடர்பாக பிரபாகரன், உதயலேகா ஆகியோரை கைது செய்தனர்.

வழக்கு விசாரணையின் போது பிரபாகரன் இறந்து போனார். இதைத்தொடர்ந்து உதயலேகா மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் உதயலேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதாக அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்