கேரளா வெள்ளம்.. நொடிப்பொழுதில் நடந்த மனதை பதைபதைக்கும் சம்பவம்! இன்று எப்படி இருக்கிறான்?

Report Print Fathima Fathima in இந்தியா

கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் கேரளாவே தத்தளித்தது, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர்.

அந்நிகழ்வுகள் பலருக்கும் என்றும் நீங்காத வடுவாகத்தான் இருக்கும், அச்சமயத்தில் மக்களுக்கு ஹீரோவானவர்கள் பலர், அவர்களில் ஒருவர் தான் கண்ணையா குமார்.

பெரியாறு நதியில் வெள்ளம் கரைபுரண்டு வந்த நேரத்தில், இடுக்கி மாவட்டம் செருதொனி பகுதியில் ஒரு தந்தையின் கைகளில் இருந்த சிறு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஒரு பாலத்தை ஓடிக்கடந்தார்.

அவர் பாலத்தைத் தாண்டியதும் அந்த இடம் தகர்ந்து பாலம் உள்வாங்கி கடல்போல தோன்றும் காட்சிகள் பார்ப்போரை நிச்சயம் கண்கலங்க செய்யும், அதற்காக அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 26 நொடிகளே.

தற்போது ஒரு வருடத்தை கடந்துவிட்ட நிலையில் அச்சிறுவன் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

யார் அவர்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

காப்பாற்றப்பட்ட சிறுவனின் பெயர் சூரஜ், 4 வயதான இவன் தற்போது LKG படித்துக் கொண்டிருக்கிறான்.

குமுளி செல்லும் வழியில் அமைந்திருக்கும் இவர்களது வீடு அழகான பூஞ்சோலைகளால் சூழப்பட்டுள்ளது.

ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் சூரஜ்ஜை பார்த்து கண்கலங்கும் அவனது அம்மா மஞ்சு, அன்றைய தின சம்பவங்களை மறக்கவே முடியாது என்கிறார்.

அவர் கூறுகையில், தொடர்ந்து 10 நாட்களாக மழை பெய்ததால் சூரசுக்கு காய்ச்சல் வந்துவிட்டது, மூச்சுவிடவும் சிரமப்பட்டான்.

அன்றைய தினம் நிலை மிகவும் மோசமானதால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன், பாலத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

மதிய வேளையில் அவனது தந்தை வந்ததும், மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார், பாலத்தை கடக்க முடியாத சூழல்.

அருகில் இருந்த மீட்புப்படையினரிடம் சூரஜின் நிலையை எடுத்துக் கூறினார், உடனடியாக கண்ணையாகுமார் பாலத்திற்கு அந்தபக்கம் இருந்த மேலதிகாரியிடம் அனுமதி பெற்று சட்டென சூரஜை கையில் அணைத்துக் கொண்டு கடந்தார்.

என் கணவரும் அவரை பின்தொடர்ந்தார், சூரஜ் பயப்படக்கூடாது என்பதற்காக மார்போடு அணைத்து வைத்திருந்தார்.

அவர்கள் கடந்த அடுத்த நொடியே பாலம் ள்வாங்கி கடல் போல் காட்சியளித்தது, மனதை பதைபதைக்கும் காட்சிகளை இப்போது பார்த்தாலும் ஒருவித பயமே தொற்றிக் கொள்கிறது என்கிறார் கண்ணீருடன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்