செல்போன் மூலம் தலாக் கூறிய கணவன்: பொலிஸ் நிலையம் சென்றதால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் தலாக் கூறிய கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்த காரணத்திற்காக மனைவியின் மூக்கை கணவனின் குடும்பத்தினர் அறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தலாக் தடை சட்டமானது சமீபத்தில் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் அமுலுக்கு வந்தது.

இந்த நிலையில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த கணவன், செல்போன் மூலம் தன்னுடைய மனைவிக்கு தலாக் கூறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக பொலிஸ் நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் பொலிஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவன், புகாரை வாபஸ் வாங்குமாறு மனைவியிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், கூர்மையான ஆயுதத்தை கொண்டு, பெண்ணின் மூக்கை அறுத்து தலையில் கல்லால் ஓங்கி அடித்துள்ளனர்.

மேலும், சம்மந்தப்பட்ட பெண்ணின் தாயாரையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தலாக் கூறிய கணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்