கொலைக்குற்றவாளியின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்ட பெண் பொலிஸ்

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேசத்தில் நீதிமன்ற விசாரணைக்கு வந்த கொலைக்குற்றவாளியின் அழகில் மயங்கி, பெண் பொலிஸ் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பயல் என்கிற பெண் கான்ஸ்டபிள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ராகுல் தரசனா (30) என்கிற குற்றவாளியை முதன்முறையாக நீதிமன்றத்தில் சந்தித்துள்ளார்.

முதல் சந்திப்பில் அவர் மீது பயலுக்கு காதல் மலர்ந்துள்ளது. ராகுல் சிறையில் இருந்த போதும், வெளியில் இருந்த போதும் பயல் அவருடன் எப்பொழுதும் தொடர்பிலே இருந்து வந்துள்ளார்.

பல ஆண்டுகளாக செழிப்புடன் வளர்ந்து வந்த இவர்களுடைய காதல், சமீபத்தில் திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த புகைப்படங்களை ராகுல் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

திருமணத்தின் நேரம் மற்றும் இருப்பிடம் தம்பதியால் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவமானது காவல்துறைக்கு கணிசமான சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தகவல்களின்படி, ராகுல் பிரபல ரவுடி அனில் துஜானா கும்பலின் ஒரு பகுதியாக உள்ளார். 2008 ஆம் ஆண்டில் தனது குற்றச் செயல்களைத் தொடங்கினார்.

அவர் சிறைக்கு உள்ளே செல்வதையும், வருவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் ஜூலை 2017 இல் சரணடைந்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேபோல மன்மோகன் கோயல் என்ற வர்த்தகரை கொலை செய்ததாக ராகுல் மீது குற்றம் சாட்டப்பட்டு, மே 9, 2014 அன்று கைது செய்யப்பட்டார். 12-க்கும் அதிகமான கொள்ளை மற்றும் கொலை வழக்குகளிலும் அவர் குற்றம் சட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்