வேலூர் தேர்தல் முடிவு.... மக்களுக்காக களத்தில் நிற்போம் என சீமான் சூளுரை

Report Print Raju Raju in இந்தியா

வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தோற்ற நிலையில் சீமான் அது குறித்து பேசியுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 26,797 வாக்குகள் கிடைத்தது.

அ.தி.மு.க - தி.மு.க வேட்பாளர்கள் இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசத்தைவிட, நாம் தமிழர் வேட்பாளர் தீபலட்சுமி பெற்ற வாக்குகள் அதிகம் என்பது முக்கிய விடயமாகும்.

இது நாம் தமிழர் கட்சி தமிழக அரசியலில் மாற்று கட்சியாக உருவெடுத்துள்ளதை காட்டுவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சியை மக்கள் ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவர்களது பிரச்சினை. எனினும் நாங்கள் தொடர்ந்து களத்தில் இருப்போம்.

அதிக பணம் கொடுத்தவர்கள் ஆளும் கட்சி, குறைவாக பணம் கொடுத்தவர்கள் எதிர்க்கட்சி என்ற நிலை தான் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்