கொட்டித் தீர்க்கும் பேய் மழை... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறோம்: கண்ணீர் வடிக்கும் தாய்

Report Print Arbin Arbin in இந்தியா

கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர். பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலத்தில் வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்னாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகமான சேதத்தை எதிர்கொண்டுள்ள வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 42-க்கும் அதிகமானவர்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

உள்மாவட்டங்களை இணைக்கும் பல முக்கிய சாலைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 315 தற்காலிக முகாம்களில் சுமார் 25 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தாயார் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

அதில் அவர், நாங்கள் வீட்டில் இருக்கும்போது பெரிய சத்தம் கேட்டது. ஓடிவந்து வெளியில் பார்த்தபோது, அருகிலிருந்த இடங்கள், கட்டிடங்கள் அனைத்தும் கீழே சரிந்து விழுந்துகொண்டிருந்தன.

அதைப் பார்த்ததும், என் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியில் ஓடிவந்துவிட்டேன். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே நாங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

தற்போது, முகாம்களில் தங்கியுள்ளோம். எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த பலரை முகாம்களில் காணவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை என்று நிலச்சரிவிலிருந்து மீண்ட ஒரு தாய் கண்ணீருடன் தெரிவித்துள்ளது தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்