நெருக்கமாக இருந்தபோது எடுத்த படங்கள்... பெண்ணை மிரட்டி பணம் கேட்ட இளைஞர்: அம்பலமான பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் சென்னையில் நெருக்கமாக இருந்த போது எடுத்த புகைப்படங்களை காட்டி, பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி வந்த முன்னாள் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 36 வயதான நெல்சன். கூலி தொழிலாளியான இவர், சில ஆண்டுகளுக்கு முன் பெரியமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

மட்டுமின்றி பலமுறை நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இருவரின் காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது.

நெல்சன் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என்பதால் மகளை திருமணம் செய்து கொடுக்க குடும்பத்தார் மறுத்துவிட்டனர்.

வேறு வழியின்றி பெற்றோர் கூறிய நபரை அந்த இளம்பெண் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நெல்சன் தனது காதலியை அவரது கணவருக்கு தெரியாமல் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது, இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தைகாட்டி அடிக்கடி ஆயிரக்கணக்கில் பணத்தை பறித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இளம்பெண் பணம் கொடுக்க முடியாது என்று கூறி நெல்சனை பார்க்க மறுத்து வந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 6 ஆம் திகதி வேப்பேரி நெடுஞ்சாலை, நேவல் மருத்துவமனை சாலை சந்திப்பில் இளம்பெண் சென்றபோது, நெல்சன் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே நெல்சன், இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்றும், உன் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுபற்றி பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பொலிசார் வழக்கு பதிவு செய்து நெல்சனை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்