மோடியை தண்ணீரில் தள்ளிவிட்டேன்! பியர் கிரில்ஸ் என்ன சொல்கிறார்?

Report Print Fathima Fathima in இந்தியா

Discovery தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல Man VS Wild நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி வருகிற 12ம் திகதி தோன்றவிருக்கிறார்.

இதுகுறித்து பியர் கிரில்ஸ் ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், காடுகளுக்கு அனைவருமே ஒன்று தான்.

தைரியமும், அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே அங்கு பயணிக்க முடியும், எங்களது பயணத்தில் மோசமான காலநிலை நிலவிய போது கூட அவர் அமைதியாக உற்சாகத்துடன் காணப்பட்டார்.

கடுமையான மழையின் போது கூட அவர் முகத்தில் புன்னகை தான் இருந்தது, பாதுகாப்பு குழுவினர் குடை பிடிக்க முயன்ற போதுகூட ”தேவையில்லை” என்று கூறினார்.

அங்குள்ள நதியை கடப்பதற்காக சிறு படகொன்றை தயார் செய்தேன், ஆனால் அவர் பயணிக்க அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு குழுவினர் தெரிவித்து விட்டனர்.

இருந்தபோதும் தைரியமாக நான் வருகிறேன் என கூறினார், அவர் படகில் ஏறியதும் என்னையும் ஏறச் சொன்னார்.

அப்போது படகு மூழ்கியதும் நான் அவரை தண்ணீரில் தள்ளிவிட்டேன், முழுவதுமாக நனைந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் மோடி சிறுவயதில் காட்டுப்பகுதியில் இருந்தவர் என்பதால் அவரால் எளிமையாக அங்கு இருக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்