திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லை! ஊரில் உள்ள மனைவியை காண சென்ற கணவன் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மனைவி உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற சென்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மர் (30). இவர் சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

தர்மருக்கும் ஜான்சி ராணி என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் மனைவியின் செளகரியத்துக்காக வீட்டில் சின்னதாகக் குளியலறைக் கட்டியதுடன், தனது வீட்டின் பின்புறத்தில் இருந்து வயர் மூலம் அவர் மின்சாரம் எடுத்திருந்தார்.

இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் ஒருவருக்கொருவர் அதிக பாசத்தோடு வாழ்ந்து வந்தனர்.

மனைவியை பார்ப்பதற்காக அடிக்கடி சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் தர்மர் சில தினங்களுக்கு முன்னர் அதே போல ஊருக்கு வந்தார்.

அப்போது குளியலறைக்கு செல்லும் மின்வயரையொட்டிய கம்பியில் தான் துவைத்த துணியை காயப்போட்டிருந்த ஜான்சி ராணி அதை எடுக்க முயன்ற போது துணி கீழே விழுந்தது.

அந்தத் துணியை ஜான்சி ராணி கீழே குனிந்து எடுக்க முயன்ற போது மின்வயரையொட்டிய அந்தக் கம்பியில் மின்சாரம் பாய்ந்திருப்பது அறியாத அவரின் தலைமுடி, கம்பியில் பட்டது.

இதையடுத்து ஜான்சி ராணியின் மீது மின்சாரம் பாய்ந்தது, இந்த காட்சியை பார்த்து பதறியடித்தபடி அங்கு வந்த தர்மர், மனைவியைக் காப்பாற்ற அருகில் வந்து அவரை தொட்ட போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

சிறிது நேரத்தில் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதன்பின்னர் குடும்பத்தார் வந்து பார்த்த போது இருவரும் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகன் மற்றும் மருமகளை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத தர்மரின் தந்தை பொன்னுசாமி மற்றும் தாய் அழகம்மாள் கூறுகையில், தர்மர் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில், என் மருமகள் தான் எங்களை கவனித்து வந்தார்.

மகனும் மருமகளும் எங்கள் மீது அவ்வளவு பாசமாக இருப்பார்கள். அவர்கள் இருவரையும் ஒரே நாளில் இழப்போம் எனக் கனவில் கூட நினைக்கவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்