திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை! தனியாக வாழ்ந்த மனைவிக்கு என்ன ஆனது? சிசிடிவியில் பதிவான காட்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் காதல் மனைவியின் தலையை தனியாக வெட்டியெடுத்து சாலையில் கொண்டு சென்ற கொடூர கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரபுகுமார் (30). இவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிலையில் அதே மருத்துவமனைவியில் மணி கிரண்டி (26) என்ற இளம்பெண் செவிலியராக பணிபுரிந்தார்.

பின்னர் இருவருக்கும் நட்பான நிலையில் அது காதலாக மாறியது, இதை தொடர்ந்து பிரபுவும், கிரண்டியும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர், இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என தெரிகிறது.

திருமணமான இரண்டாண்டுகள் வரை மண வாழ்க்கை நிம்மதியாக சென்ற நிலையில் பின்னர் தம்பதிக்கு இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இதையடுத்து ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்த சூழலில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் பிரபு தன்னை அடிக்கடி சந்தித்து துன்புறுத்துவதாக கூறி கிரண்டி பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்தனர்.

இதையடுத்து 20 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் பிரபு சிறையிலிருந்து வெளியில் வந்தார்.

இந்த சூழலில் நேற்று காலை கிரண்டி வீட்டுக்கு பிரபு வந்தார், அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தன்னிடம் இருந்த கத்தியால் கிரண்டி கழுத்தை பிரபு வெட்டி கொலை செய்தார்.

பின்னர் வெட்டிய தலையுடன் பிரதீப் தெருவில் நடந்து சென்றதால் பொதுமக்கள் அச்சத்தில் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே சென்றனர்.

அந்த தலையை அங்கிருந்த கால்வாயில் தூக்கி போட்ட பிரபு நேராக காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார், இதையடுத்து சம்பவம் நடந்த தெருவில் உள்ள சிசிடிவி கமெராவை பொலிசார் ஆய்வு செய்த போது பிரபு எந்தவித பதட்டமும் இன்றி மனைவியின் தலையை கையில் எடுத்து கொண்டு நடந்து சென்ற காட்சி பதிவாகியிருந்ததை பார்த்து அதிர்ந்தனர்.

இதனிடையில் பிரபுவால் கிரண்டி உயிருக்கு ஆபத்து என பலமுறை பொலிசில் புகார் கொடுத்தும் அவர்கள் சரியான பாதுகாப்பை தரவில்லை என கிரண்டியின் தாய் மற்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்