வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வியாபாரி செய்த நெகிழ்ச்சி காரியம்: குவியும் பாராட்டு மழை

Report Print Vijay Amburore in இந்தியா

கேரளாவில் தெருவோரமாக கடை நடத்தி வரும் வியாபாரி, பக்ரீத் பண்டிகைக்காக வாங்கிய அனைத்து துணிகளையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி பண்டிகையை வித்யாசமாக கொண்டாடியுள்ளார்.

பல வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2 பெரிய வெள்ளப்பாதிப்புகள் கேரளாவை அழிவுப்பாதைக்கு விட்டு சென்றுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கிய ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆகஸ்டு மாதம் அதற்கு அப்படியே மாறாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்கம் கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் பெரிய அளவிற்கு பிரதிபலித்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக கேரளாவில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளார். மேலும், 58 பேர் காணாமல் போயுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 2.5 இலட்சம் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த நவ்ஷத் என்கிற தெருவோர கடை வியாபாரி, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரத்திற்காக அதிகமான துணிகளை வாங்கி வைத்திருந்தார். அவை அனைத்தையும் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து தன்னுடைய பக்ரீத் பண்டிகையை வித்யாசமாக கொண்டாடியுள்ளார்.

கடந்த ஆண்டும் கேரளாவில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தின் போது, இதேபோல நவ்ஷத் தன்னுடைய கடையில் இருந்த துணிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்