பெற்ற தாயின் சடலத்தை குப்பை தொட்டியில் வீசி சென்றது ஏன்? மகனின் அதிரவைத்த வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பெற்ற தாயின் சடலத்தை குப்பை தொட்டியில் வீசி சென்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தனசிங் நகரைச் சேர்ந்தவர் கோவில் பூசாரியான முத்துலட்சுமணன்.

இவரது தாய் வசந்தியின் சடலத்தை இன்று காலையில் குப்பைத் தொட்டி அருகே பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பொலிசார் மூதாட்டி வசந்தியின் உடலை ஆம்புலன்சில் எடுத்துச் சென்றனர்.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் முத்துலட்சுமணனே தனது தாயின் சடலத்தை அங்கு கொண்டுவந்து போட்டுச் சென்றது தெரியவந்தது.

மேலும் வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு தாய் இறந்ததாகவும் அவரது இறுதிச் சடங்கை மேற்கொள்ள பணம் இல்லாததால் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றதாகவும் முத்துலட்சுமணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்