வெள்ளத்தில் தவிக்கும் கடவுளின் தேசத்திற்கு கோடிக்கணக்கில் குவியும் நிதியுதவி... இதுவரை மட்டும் எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் தவித்து வரும் நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2 கோடிக்கு மேல் நிதியுதவி வந்துள்ளது.

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த, தொடர் மழை காரணமாக கேரள மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.

வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 77-க்கும் அதிகமானமக்கள் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

தொடர்ந்து ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 'கேரளா வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது, தங்கள் சொந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் உதவுங்கள்' என்று சமூகவலைத்தளங்களில் திரைபிரபலங்கள் பலரும், கேரள முதலமைச்சர் நிதியுதவியின் இணையதள பக்கத்தை அதிகம் பகிர்ந்து வந்தனர்.

இதையடுத்து தற்போது 24 மணி நேரத்தில், கேரளாவுக்கு 2.5 கோடி நிதியுதவி குவிந்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், கேரளா அரசு உதவி கேட்காத நிலையில், சமூகவலைத்தள பக்கத்தில் கேரளாவுக்கு உதவும் படி பலர் பகிர்ததால் இது சாத்தியமாகியுள்ளது.

நாள் ஒன்றிற்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் தான் வரும், ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து திங்கட்கிழமை இரவுக்குள் ஒரு நாள் நிதியாக 1.60 கோடி வந்துள்ளது.

இதை உள்ளூர், வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் மக்கள் தான் தங்களால் இயன்ற சிறிய தொகையை கொடுத்து உதவியுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து திங்கட்கிழமை இரவுக்குள் மட்டும் 15,029 பேர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவியுள்ளனர்.

இந்த கனமழை காரணமாக கேரள அரசு, சேதங்களை அடிப்படையாக வைத்து மொத்தம் 44 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கேரளா அரசு உதவி கேட்காமலே பலர் இப்படி உதவி செய்துள்ளனர்,

கடந்த 2018-ஆம் ஆண்டு இதே போன்று கேரளாவில் கனமழை பெய்த போது நிதியுதவி குவிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்