வாலிபருடன் நெருக்கம்! அவரை இரண்டாம் திருமணம் செய்ய நினைத்த வசதியான பெண்.. சிசிடிவியில் பதிவான அந்த காட்சி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் சொத்துக்காக ஆட்களை ஏவி தங்கையை கொலை செய்த அக்காவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயா (34). இவர் சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

ஜெயாவின் கணவர் மூர்த்தி இறந்து விட்ட நிலையில் அவர் தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. அதை வாடகைக்கு விட்டு உள்ளார்.

ஜெயாவின் அக்கா தேவி மாமல்லபுரத்தில் வசிக்கிறார். தேவிக்கு ஜெயா மாதா மாதம் வீட்டு வாடகை பணத்தை கொடுத்து விடுவதோடு பல்வேறு உதவிகளையும் செய்து வந்தார்.

இந்நிலையில் வாலிபர் ஒருவருடன் ஜெயா நெருக்கமாக பழகி வந்தார். அவரை 2-வது திருமணம் செய்து கொள்ள அவர் முடிவு செய்திருந்ததாக தெரிகிறது.

ஜெயாவின் இந்த முடிவு தேவிக்கு பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டால் தனது தங்கை செய்யும் பண உதவி தனக்கு கிடைக்காமல் போகலாம் என்று பயந்தார்.

இந்த சூழலில் ஜெயா மர்மமான முறையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவருடைய வீட்டில் இறந்து கிடந்தார்.

ஜெயாவுக்கு ஏற்கனவே வயிற்றில் இருந்த கட்டிக்காக ஆபரேஷன் நடந்த நிலையில் அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் அவர் இறந்துவிட்டதாக தேவி நாடகமாடினார்.

இதே காரணத்தை தேவி பொலிசில் கூறிய நிலையில் அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் பொலிசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஜெயா உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட போது அவர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் ஜெயாவின் வீடு அருகில் உள்ள கண்காணிப்பு கமெராவில் 2 பேர் அவர் வீட்டுக்குள் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

இது குறித்த விசாரணையில் ஜெயாவின் அக்காள் தேவி ரூ.10 ஆயிரம் கூலி கொடுத்து தனது மாமா எத்திராஜ் (41) என்பவரையும், அவருடைய கூட்டாளி சரவணன் என்பவரையும் அனுப்பி வைத்து ஜெயாவை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்த தேவி, எத்திராஜ், சரவணன் ஆகியோரை பொலிசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்