குழந்தையை குளிப்பாட்டும்போது வந்த அழைப்பு.. திரும்பி வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் வாளியில் குளித்த ஒன்றரை வயது குழந்தை, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது ஒன்றரை வயது குழந்தை அருணை, எப்போதும் வாளியில் வைத்து குளிப்பாட்டுவது வழக்கம்.

இதேபோல் நேற்றைய தினமும் தனது குழந்தையை குளிப்பாட்ட இருந்தார் முருகன். அப்போது நீர் நிரம்பிய வாளி அருகே குழந்தை நின்றுகொண்டிருந்தது. அச்சமயம் முருகனுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததால், அங்கிருந்து சென்றுள்ளார்.

அதே நேரம் குழந்தை நீர் நிரம்பிய வாளியில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளது. முருகன் திரும்பி வந்தபோது, குழந்தையின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், குழந்தை அங்கு பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தை நீரில் மூழ்கிய நேரத்தில் முருகனின் மனைவி சமையல் அறையில் இருந்த காரணத்தினால், அவரும் குழந்தையை கவனிக்க தவறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்