தேசிய கதாநாயகன் அபிநந்தனின் வீர தீர செயலைப் பாராட்டி உயரிய விருது..!

Report Print Kabilan in இந்தியா

சுதந்திர தினத்தையொட்டி இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தபோது, அதனை துரத்திச் சென்று அழித்தவர் wing commander அபிநந்தன்.

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில் அவரது வீர தீர செயலைப் பாராட்டி இந்திய அரசு விருது வழங்க உள்ளது. போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வழங்கப்படும் வீர் சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

இதனை சுதந்திர தினமான நாளை (ஆகஸ்ட் 15) அபிநந்தனுக்கு வழங்கி கௌரவிக்க உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers