நாடு முழுவதும் வைரலான தமிழ் தம்பதிக்கு கிடைக்க போகும் மிகப்பெரிய கெளரவம்.. என்ன தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த முதிய தம்பதிக்கு தமிழக அரசு விருது வழங்கவுள்ளது.

நெல்லை கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகவேல் (68), மனைவி செந்தாமரை (65). சமீபத்தில், சண்முகவேல் தனது வீட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த போது, அங்கு கையில் அரிவாளுடன் வந்த இரு கொள்ளையர்கள், சண்முகவேல் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்க அதைப் பார்த்து வெளியே வந்த செந்தாமரை கொள்ளையர்களை நோக்கி கைகளில் கிடைத்த பொருட்களை கொண்டு சரமாரியாக தாக்கினார்.

இந்த இடைவெளியில், சண்முகவேலும் நாற்காலி கொண்டு கொள்ளையர்களை தாக்க, ஒருக் கட்டத்தில் கொள்ளையன் ஒருவன் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டான்.

அதன்பிறகும் கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்ட, மனம் தளராத வயதான தம்பதி அவர்களை விடாமல் தாக்கினர். அதற்கும் மேல் அங்கிருப்பது ஆபத்து என்று கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இது தொடர்பான வீடியோ இந்தியா முழுவதும் வைரலானது, இந்த தம்பதியின் வீரதீர செயலுக்கு பொதுமக்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் கொள்ளையர்களை விரட்டிய வீர தம்பதிகள் சண்முகவேல், செந்தாமரைக்கு நாளை சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழக அரசின் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கவுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்