இந்திய தலைநகர் டெல்லியில் 100 ரூபாய்க்கு உடுப்பு வாங்கியதற்காக அக்காளின் கண்களை தோண்டி தம்பி வெளியே எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் துவாரகா பகுதியிலேயே 17 வயது சிறுவனின் கொடூரத்திற்கு 20 வயதான சிறுமி இரையாகியுள்ளார்.
100 ரூபாய் அளவுக்கு உடுப்பு வாங்கியதாலையே சிறுவன் அவனது அக்காளை கொடூரமாக தாக்கியதாகவும், பின்னர் அவரது கண்களை தோண்டி வெளியே எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் அப்போது இருந்த மகளிர் அமைப்புகளே சிறுமியின் அலறல் கேட்டு காப்பாற்றியுள்ளனர்.
அதிர வைக்கும் இச்சம்பவம் நடந்த வேளையில், சிறுமியின் பெற்றோர் பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
குடியிருப்புக்கு உள்ளே நுழைய முயன்ற மகளிர் அமைப்பு உறுப்பினர்களையும் சிறுவன் தாக்க முயன்றுள்ளான்.
இதனிடையே அறையில் பூட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுமியை மகளிர் அமைப்பு உறுப்பினர்கள் மீட்டுள்ளனர்.
பின்னர் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் முறையிட்டு சிறுமியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
சிறுவனின் துன்புறுத்தலால் சிறுமியின் முகம் வீங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சிறுமி மருத்துவமனை கொண்டு சென்ற வேளையில் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.