பேய் மழையில் தத்தளிக்கும் கடவுளின் நாடு.. மீண்டும் சிவப்பு எச்சரிக்கை: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

கேரளாவில் மழை, வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை(red alert) விடப்பட்டு உள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாத அளவுக்கு பேய் மழையாக பெய்து வருகிறது.

கடந்த 8 ஆம் திகதி முதல் தீவிரம் அடைந்த இந்த மழை கேரளாவையே புரட்டிப்போட்டு வருகிறது.

கனத்த மழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதேவேளை வடக்கு பகுதி மாவட்டங்களான மலப்புரம், வயநாடு ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

மழை வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று மட்டும் கவளப்பாறை பகுதியில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளது.

வயநாடு புதுமலையில் மண்ணில் புதையுண்ட 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

அந்த பகுதியில் மேலும் 40 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மாநிலம் முழுவதும் இன்றும் கனமழை பெய்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மழை நீடிப்பதால் மீட்புப்பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை காரணமாக 1057 வீடுகள் முழுவதுமாக இடிந்து விட்டது. 11 ஆயிரத்து 159 வீடுகள் பகுதியாக சேதம் அடைந்து உள்ளது.

இதனிடையே கோழிக்கோடு, மலப்புரம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

அதேப் போல கண்ணூர், வயநாடு, பாலக்காடு, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்