இரண்டு மனைவிகள்! என் காலில் விழுந்து கெஞ்சினாள்! தங்கையை துடிதுடிக்க கொலை செய்த அக்காவின் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா
989Shares

வெளியூரில் இருந்து சென்னையில் வந்து தங்கி தனது தங்கையை கொலை செய்த அக்கா பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டியை சேர்ந்த ஜெயா, மாநகராட்சியில் சாலைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

ஜெயாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த அவரின் வீட்டுக்கு சகோதரியான தேவி, கடந்த சில தினங்களுக்கு முன் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து வந்திருக்கிறார்.

இந்தநிலையில், கடந்த 12-ம் திகதி அதிகாலை ஜெயா இறந்துவிட்டதாகக் கூறி தேவி கதறி அழுதிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஜெயாவின் வீட்டுக்கு வந்தபோது திடீரென நெஞ்சு வலி காரணமாக ஜெயா இறந்துவிட்டதாகத் தேவி கண்ணீர்மல்கக் கூறினார்.

இதையடுத்து, ஜெயாவின் இறுதி அஞ்சலிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சமயத்தில் ஜெயாவின் உறவினர் ராஜா என்பவர் ஜெயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்து ஜெயா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

பின்னர் ஜெயா வீட்டின் அருகிலிருந்த சிசிடிவி கமெரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதில் அதிகாலை நேரத்தில் ஜெயாவின் வீட்டுக்குள் இரண்டு பேர் செல்கின்றனர். அதன் பின் 40 நிமிடங்களுக்குப் பிறகு அவர்கள் முகத்தை மறைத்தபடி வெளியில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

அவர்கள் சென்ற பிறகுதான் தேவி, கதறி அழுதபடி வெளியில் வரும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

இதனால் தேவியிடம் பொலிசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தியபோது ஜெயாவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து தேவி மற்றும் கொலைக்கு உதவியாக இருந்த சிற்பக்கலைஞர் எத்திராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர், இன்னொருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

பொலிசார் கூறுகையில், அவர் இறந்த பிறகு கிடைக்கும் நிவாரணத்துக்காகவும் குடும்ப சொத்துகளுக்காகவும் இந்தக் கொலை நடந்துள்ளது.

ஜெயாவை கொலை செய்வதற்காகவே தேவி சைதாப்பேட்டை வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார் என கூறினர்.

ஜெயா அளித்துள்ள வாக்குமூலத்தில், என் அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். என் தங்கை தான் ஜெயா. எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். இதனால் குடும்ப சொத்துகளைப் பிரிப்பதில் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் ஜெயாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் ஜெயாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. திருமணத்துக்கு முன்பே ஜெயாவுடன் பழகிய ஒருவரைத் தற்போது திருமணம் செய்துகொள்ள அவர் முடிவு செய்திருந்தார்.

ஜெயா, திருமணம் செய்துவிட்டால் குடும்ப சொத்துகளைப் பிரிப்பதில் மேலும் சிக்கல்கள் வரும். ஜெயாவின் ஆசையும் நிறைவேறக் கூடாது என்று கருதினேன்.

இதனால்தான் ஜெயாவை கொலை செய்யத் திட்டமிட்டேன். திட்டப்படி எத்திராஜ் மற்றும் அவரின் நண்பர் ஆகியோர் சம்பவத்தன்று ஜெயாவின் வீட்டுக்கு வந்தனர்.

மூன்று பேரும் சேர்ந்து ஜெயாவைக் கொலை செய்தோம். உயிருக்குப் போராடிய ஜெயா, தன்னை விட்டுவிடும்படி காலில் விழுந்து கெஞ்சினார்.

அவரை உயிரோடு விட்டுவிட்டால் எங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவார் என்று கருதி அவரின் கழுத்தை நெரித்தும் தலையனையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்தோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்