தத்தளிக்கும் கடவுளின் தேசம்! மீட்பு பணியில் உயிரை விட்ட மாமனிதர்.. அவருக்காக பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Raju Raju in இந்தியா

கேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு பிரபல நடிகர் ஜெயசூர்யா செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் 97 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த போனத் லினு (34). இவரது வீடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் தன் குடும்பத்தினருடன் முகாமில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகத் தன் நண்பர்களுடன் சென்ற லினு, மீண்டும் திரும்பவே இல்லை. பொதுமக்களைக் காப்பாற்றும்போது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் வேதனைப்பட்ட மலையாள நடிகர் ஜெயசூர்யா, உயிரிழந்த லினுவின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக லினுவின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூர்யா, லினு கேரள மக்களுக்காக தன் உயிரையே கொடுத்திருக்கிறார்.

தயவுசெய்து நான் அளிக்கும் பணத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னையும் உங்கள் மகனாக நினைத்து இதனை ஏற்க வேண்டும் என கலங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...