வெள்ளத்தின் நடுவே புதிதாக வாழ்க்கையை துவங்கிய தம்பதி

Report Print Vijay Amburore in இந்தியா

கடுமையான வெள்ளத்தால் கேரள மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கையில், நிவாரண முகாமில் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த சில தினங்களாகவே கேரளா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களை மீட்கும் பணியில் மீட்பு படை வீரர்களும், தன்னார்வாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சு - ஷைஜு ஜோடிக்கு திருமணம் செய்ய நிச்சயித்திருந்தனர்.

ஆனால் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அஞ்சுவின் வீடு அடித்து செல்லப்பட்டுவிட்டது. இதனையடுத்து அஞ்சுவும், அவருடைய தாயாரும் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் முகாமில் இருந்த மக்கள் திருமணம் குறித்து கேள்விப்பட்டதும், உடனடியாக ஒன்றுகூடி திருமணத்திற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

மணப்பெண்ணுக்கு புத்தாடைகள் உடுத்தி திருமணத்திற்கு தயாராகினர். சரியான நேரத்தில் ஷைஜுவும் வந்து சேர, உறவினர்கள் முகாம் வாசிகள் மத்தியில் இனிதாக திருமணம் நடந்து முடிந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்