இந்திய மாநிலம் கேரளாவில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட லாத்வியா நாட்டு யுவதியின் சகோதரி கடும் மழையில் தத்தளிக்கும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பருவ மழைக்கு கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் உயிரழப்புகள் அதிகரித்து வருகிறது.
பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு இந்தியாவில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பலர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட லாத்வியா நாட்டு யுவதியின் சகோதரியே தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
இலிஸா என்ற யுவதியே தற்போது கேரள மக்களுக்காக உதவிக்கரம் நீட்டியுள்ளார். தமது வருவாயில் ஒருபகுதியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை முதலமைச்சர் பினராயி விஜயன் தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.