நீரின்றி அமையாது உலகு! தேசிய கொடி ஏற்றி பிரதமர் மோடியின் உரை

Report Print Fathima Fathima in இந்தியா

73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 6வது முறையாக தேசியக் கொடி ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது, இதற்காக நாட்டு மக்களுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார் மோடி.

இன்று காலை செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மோடி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதமரின் உரை

மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, பல விடயங்களை குறிப்பிட்டு பேசினார், தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடுகையில் தமிழில் நீரின்றி அமையாது உலகு என திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

  • நீர் திட்டங்களுக்காக ரூ.3.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம், ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீரை கொண்டு செல்ல உள்ளோம்
  • ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமை
  • அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து கவலையடைய வேண்டும்
  • நாட்டில் ஊழல் பெரிய வியாதி போல வளர்ந்து இருக்கிறது
  • அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதால் நாட்டில் வறுமையை போக்க முடியும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்