'காசு எங்க... இல்லையா, போயிட்டே இரு' தொண்டரிடம் காட்டமாக பேசிய வைகோ! வீடியோவுடன்

Report Print Abisha in இந்தியா

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொண்டரிடம் காசு கேட்டு காட்டமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் புகைப்படம் எடுத்து கொள்ள 100ரூபாய் செலுத்த வேண்டும் என்று மதிமுக கட்சி நிர்வாகம் கேட்டு கொண்டிருந்தது. மேலும், வைகோவிற்கு சால்வே அணிவிக்க வேண்டாம் என்றும் பதிலாக கட்சிக்கு நிதியுதவி வழங்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வைகோ வேலூர் மாவட்டம் வழியாக காரில் சென்றார். மாநிலங்களவை எம்.பி-யான பிறகு முதல் முறையாக வரும் வைகோவுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கத் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

முன் கூட்டியே, ``வைகோவுக்கு யாரும் சால்வை அணிவிக்கக் கூடாது. போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினால் 100 ரூபாய் கொடுக்க வேண்டும்’’ என்று மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே வந்திறங்கிய வைகோவை பட்டாசு வெடித்து ம.தி.மு.க-வினர் உற்சாகமாக வரவேற்றனர். அவருடன் செல்ஃபி, போட்டோ எடுக்கப் பலர் முண்டியடித்தனர். போட்டோவுக்கு `போஸ்’ கொடுத்த வைகோ 100 ரூபாயைக் கேட்டு வாங்கி கொண்டார்.

தொண்டர்கள் சிலர் 100 ரூபாய் கூட இல்லாமல் போட்டோ எடுத்துக் கொள்ள சிரித்த முகத்துடன் அருகில் சென்றனர். அவர்களிடம் வைகோ, `காசு எங்க... இல்லையா, போயிட்டே இரு...’ என்று வைகோ காட்டமாக பேசினார். இதனால், அவர்கள் வருத்தத்துடன் விலகிச் சென்றனர். வைகோவின் இந்தச் செயல் அங்கிருந்த தொண்டர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

https://twitter.com/sivakumarie/status/1161591898047258624?s=20

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்