கணவனை கட்டிவைத்து கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கணவரை கட்டி வைத்து கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவியை அவரது நண்பருடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலத்தின் மும்பையில் வசாய் பகுதியில் மனைவி குயின் சியா (28) என்பவருடன் குடியிருந்து வருபவர் அசாமைச் சேர்ந்த 38 வயதான பவிஷ்யா புராஹோகைன்.

இதே பகுதியில் நாயக் என்பவரும் குடியிருந்து வந்துள்ளார். பவிஷ்யாவின் நண்பரான நாயக், அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

இதனால் பவிஷ் யாவுக்கு மனைவி மீது சந்தேகம் வரத் தொடங்கியது. நாயக்குடன் அவர் தகாத உறவு வைத்திருப்பதாக நினைத்தார்.

இதைத் தொடர்ந்து குயின்சியாவை அடிக்கடி துன்புறுத்தியும் வந்துள்ளார். தனக்கும் நாயக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறியும் தாக்குதலை தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக உறவினர்களிடம் புகார் தெரிவித்த குயின்சியாவை அவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். பின்னரும் சந்தேகத்தால் அவரை துன்புறுத்தி வந்துள்ளார் பவிஷ்யா. இந்த நிலையில்,

நேற்று முன்தினமும் வழக்கம் போல இருவரும் இதே விவகாரத்தை முன்னிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பின்னர் தூங்கச் சென்றுவிட்டார் பவிஷ்யா. அப்போது நாயக்கை வீட்டுக்கு அழைத்த குயின்சியா, அவர் உதவியோடு கணவனின் கால்களைக் கயிற்றால் கட்டியுள்ளார்.

பின்னர் சுத்தியலால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அடுக்களையில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து வந்து கண்களில் தூவியுள்ளார்.

இருந்தும் ஆத்திரம் தணியாமல் அடுப்பில் இருந்து கொதிக்கும் எண்ணெய்யை சட்டியுடன் தூக்கி வந்து அவர் மீது ஊற்றியுள்ளார்.

பவிஷ்யாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடியுள்ளனர். தொடர்ந்து நாயக்கையும் குயின்சியாவையும் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பவிஷ்யாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்