நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை... என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமைச் சேர்ந்தவர் பவிஷ்யா புராஹோகைன். இவர் மும்பையில் உள்ள வசாய் பகுதியில் மனைவி குயின் சியாவுடன் வசித்து வருகிறார்.

இவரது மனைவி குயின் சியா. அதே பகுதியில் வசித்து வரும் நாயக் என்பவர் புராஹோகைனின் நண்பவராவார். இதனால் இவர் அடிக்கடி வீட்டிற்கு வந்தது சென்றதால், புராஹோகைனுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாயக்குடன் தனது மனைவி தகாத உறவு வைத்திருப்பதாக நினைத்தார். இதன் காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மனைவி அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, நாங்கள் நண்பர்கள் தான் என்று கூறினாலும், புராஹோகைன் தொடர்ந்து தன் மனைவி மீது சந்தேகப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாயன்று வழக்கம் போல இருவரும் சண்டை போட்டுள்ளனர். அதன் பின் புராஹோகைன் உறங்கி விட்டார்.

அப்போது நாயக்கை வீட்டுக்கு அழைத்த குயின்சியா, அவர் உதவியோடு கணவனின் கால்களைக் கயிற்றால் கட்டியுள்ளார்.

அதன் பின்சுத்தியலால் அவரை சரமாரியாகத் தாக்கியது மட்டுமின்றி, மிளகாய்ப் பொடியை எடுத்து வந்து கணவரது கண்களில் தூவினார்.

பின்னர் அடுப்பில் இருந்து கொதிக்கும் எண்ணெய்யை சட்டியுடன் தூக்கி வந்து கணவர் மீது ஊற்றியுள்ளார். வலியால் துடித்த புராஹோகைனின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர்.

அதன் பின்னர் அப்பகுதி மக்கள் நாயக்கையும் குயின்சியாவையும் பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர். இதையடுத்து பொலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் புராஹோகைனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்