மாணவியுடன் ஆசிரியருக்கு ஏற்பட்ட காதல்! வாட்ஸ் அப்பில் வெளியான புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் காதலித்த போது நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு காதலன் அனுப்பியதால் இளம்பெண் விஷத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியை சேர்ந்தவர் சிவஞானசம்பந்தம் (31). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக உள்ளார். இவரும், அதே காலேஜில் படித்த ஒரு மாணவியும் மிக தீவிரமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, கடந்த மாதம் 30-ஆம் திகதி நிச்சயதார்த்தமும் நடந்தது. காதலிக்கு விரைவில் கல்யாணம் நடக்க இருந்ததை கேள்விப்பட்ட சிவஞானசம்பந்தம் ஆத்திரம் அடைந்தார். அதனால் மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து, பெண்ணை பற்றி தப்பு தப்பாக அவதூறு சொன்னார்.

காதலித்தபோது நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் மாப்பிள்ளையின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார். இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் கல்யாணத்தை நிறுத்தி விட்டனர்.

இதில் மனமுடைந்து போன பெண், வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததை கண்ட குடும்பத்தினர், பதறியடித்து கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பெண்ணின் தந்தை, சிவஞானசம்பந்தத்தை சந்தித்து இதை பற்றி கேட்டதற்கு, உன் மகளை வேறு யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என அவர் மிரட்டியுள்ளார்.

இந்த கொலை மிரட்டல் குறித்து பெண்ணின் தந்தை குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யவும், அதன்பேரில் சிவஞானசம்பந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்