கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்துடன் ஹொட்டல் அறையில் தங்கிய கணவன்.. அதிகாலையில் ஊழியர்கள் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மொத்த குடும்பத்தினரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள தட்டாஹள்ளியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (36). நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65). ஜாதகம் பார்ப்பவர். அம்மா, ஹேமலதா. மனைவி நிகிதா (28). மகன் ஆர்ய கிருஷ்ணா (4).

நிகிதா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் தொழிலில் ஏற்பட்ட கடும் நஷ்டத்தால் பிரகாஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் குடும்பத்தினர் அனைவருடன் பிரகாஷ் மைசூரு-ஊட்டி சாலையில் உள்ள ஹொட்டலில் சில நாட்களாக தங்கியிருந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு பிரகாஷ் தனது குடும்பத்தினர் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த ஹொட்டல் ஊழியர்கள் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னை காரணமாக இந்த சம்பவத்தை பிரகாஷ் செய்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்