கொலை செய்யப்பட்ட மகனுக்காக போராடிய கண்பார்வை இல்லாத தந்தை: கடைசியில் நடந்த சோகம்

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் மகனை கொலை செய்தவர்களிடம் இருந்து வந்த தொடர் கொலை மிரட்டலால் கண்பார்வை தெரியாத தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரத்திரன் ஜாதவ் என்பவரின் மகன் ஹரிஸ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் இருசக்கர வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் பெண் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம கும்பல் ஹாரிஸ் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. பலத்த காயமடைந்த ஹாரிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹரிஸ் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.

இதற்கிடையில் கொடுத்த வழக்கினை வாபஸ் வாங்குமாறு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள், கண்பார்வை இல்லாத ரத்திரனுக்கு போன் செய்து மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் பெரும் மனஉளைச்சலில் இருந்து வந்த ரத்திரன் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ரத்திரனின் இரண்டாவது மகன் தினேஷ் கூறுகையில், "எனது தந்தை நீதிக்காக காவல்துறையிடம் மன்றாடினார். ஆனால் அவர்கள் அவருடைய கோரிக்கையை அவர்கள் கவனிக்கவில்லை. எனது சகோதரரின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், எனது தந்தை இன்று எங்களுடன் இருந்திருப்பார்." என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்