உதவுவார்கள் என்று நம்பி உணவகத்தில் நுழைந்த நபர்- இரத்தவெள்ளத்தில் சரிந்த அதிர வைக்கும் சம்பவம்!

Report Print Abisha in இந்தியா

கைபந்தாட்டம் விளையாட அனுமதி மறுக்கப்பட்தை சம்பவத்தில் நபர் ஒருவரை உணவு விடுத்தியில் 4பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளுர் மாவட்ட திருத்தணியை சேர்ந்தவர் மகேஷ். அந்த பகுதியில் கைப்பந்தாட்ட போட்டி விளையாடுவதில் மகேஷ்க்கும் அதே பகுதியை சேர்ந்த விமலுக்கும் பிரச்னை நிலவி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், விமல் மீது முன்னதாக கொலை, மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. வாக்கு வாதத்தில் தொடங்கிய பிரச்னை, மகேஷ்ன் நண்பனை விமல் கூட்டளிகளுடன் கொலை செய்துள்ளான். மேலும், மற்றொரு நண்பனின் கையை வெட்டியுள்ளான்.

இதை அடுத்து உயிருக்கு பயந்த மகேஷ் விமலை தீர்த்துகட்ட திட்டம் தீட்டி அது பலிக்கவில்லை. இதை மனதில் வைத்திருந்த விமல் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து மகேஷ்யை திருத்தணி நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து துரத்தி உள்ளனர். தப்பிக்க மகேஷ் உணவு விடுதி ஒன்றில் நுழைத்துள்ளார். யாராவது காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பி மகேஷ்யை கண்யிமைக்கும் நேரத்தில். துரத்திய அந்த கும்பல் விடுதியின் உள்ளே சென்று சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பி உள்ளது. இதை பார்த்த அங்குள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

சம்பவ இடத்தின் அருகில் இருந்த பொலிசாார் மகேஷ்யை மீட்டு மருத்துவமனையில் சேர்க்காமல் விமல் மற்றும் கூட்டாளியை பிடிக்க பின் தொடர்ந்துள்ளனர். இதனால் 25நிமிடங்கள் உயிருக்கு போராடிய மகேஷ் மருத்துமனைக்கு கொண்டு சென்ற போதும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்