மனைவி இறந்த பின்னரும் வரதட்சணை கேட்ட கணவன்! இப்படியும் மனிதரா?

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவில் வரதட்சணை தரவில்லை என்பதற்காக மூன்று நாட்களாக இறந்த மனைவிக்கு இறுதிச்சடங்கு செய்ய விடாமல் தடுத்த கணவனை பொலிசார் எச்சரித்துள்ளனர்.

ஒடிசாவை சேர்ந்தவர் குச்செய், அங்கு திருமணம் நடந்தால் இரண்டு மாடுகள், ஒரு ஆடு மற்றும் மூன்று புடவைகள் வழங்குவது வழக்கம்.

சமீபத்தில் குச்செய்க்கு திருமணம் நடந்த போது மனைவிக்கு வரதட்சணை கொடுக்கவில்லையாம், இந்நிலையில் அவர் திடீரென இறந்து போயுள்ளார்.

ஆனால் தனக்கு வரதட்சணை கொடுக்கவில்லை என கூறி இறுதிச்சடங்கு செய்ய அனுமதி மறுத்துள்ளார்.

மூன்று நாட்களாக சொந்த பந்தங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லாததால் பொலிசாரின் உதவியை நாடியுள்ளனர்.

அவர்கள் வந்து தலையிட்டதும் குச்செய் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. பின் மனைவியின் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்