வெளிநாட்டில் இருந்து வந்த போன்! துரோகம் செய்ததாக புலம்பிய கணவன்.. கர்ப்பிணி மனைவிக்கு ஏற்பட்ட நிலை

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கர்ப்பிணி மனைவி மற்றும் மொத்த குடும்பத்தையும் சுட்டு கொன்றுவிட்டு நபர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்டாஹள்ளியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (36). இவர் தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65). அம்மா, ஹேமலதா. மனைவி நிகிதா (28). மகன் ஆர்ய கிருஷ்ணா (4 ).

இவர், மைசூரு-ஊட்டி சாலையில் உள்ள ஹொட்டலில் குடும்பத்துடன் தங்கியிருந்த நிலையில் நேற்று அதிகாலை குடும்பத்தினரை துப் பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தானும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தொழில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் பிரச்சனை காரணமாக பிரகாஷ் இப்படி செய்தார் என தெரியவந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரகாஷ், சில வருடங்களுக்கு முன் டேட்டா ஃபேஸ் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

பின்னர் உடுப்பியில் கிரானைட் தொழில் தொடங்க முடிவு செய்திருந்தார். இதற்காக துபாய் தொழிலதிபர் ஒருவரிடம் ஒப்பந்தம் போட்டு பணம் வாங்கியிருந்தார்

அந்தப் பணத்தை பெற்றதில் இருந்து அவருக்கு தொழிலதிபரிடம் இருந்து மிரட்டல் போன் கால்கள் வந்துள்ளது.

இந்த சூழலில் மன அழுத்தத்தில் இருந்த பிரகாஷ் குடும்பத்தினருடன் ஹொட்டலில் தங்கி தனது கர்ப்பிணி மனைவி மற்றும் அனைவரையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு முன்னர் தனது நண்பர் சேத்தனுடன் செல்போனில் பேசிய பிரகாஷ், கடன் தொல்லை அதிகரித்துள்ளது, சிலர் துரோகம் செய்துவிட்டார்கள்.

காலையில் உயிரோடு இருப்பேனா என்பது தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் பிரகாஷை மிரட்டிய துபாய் தொழிலதிபர் குறித்த தகவலையும் சேகரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்