தாமதமாகும் மகளின் திருமணம்... நளினி முன்வைத்த கோரிக்கையை ஏற்க அதிகாரிகள் மறுப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

லண்டனில் குடியிருக்கும் மகள் இந்தியா திரும்ப தாமதமாவதால் தமது ஒரு மாத பிணையை நீட்டிக்க கோரிய நளினியின் மனுவுக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் நளினி முன்னிலையில் திருமணம் நடைபெறுமா அல்லது மாற்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா என்பது தொடர்பில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் லண்டனில் மருத்துவம் பயின்றுவரும் தமது மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்துவைக்க ஒரு மாதம் பிணை கேட்டு முன்வைத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது ஹரித்ரா இந்தியா திரும்புவதில் தாமதமாவதாக கூறப்படுகிறது. இதனால் தமது பிணையை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நளினி சிறைத்துறை அதிகாரிகளிடம் முனவைத்திருந்தார்.

தற்போது அந்த கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மகளின் திருமணம் நளினியின் முன்னிலையில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்க கடந்த ஜூலை 26 ஆம் திகதி முதல் ஒருமாத பரோல் விடுப்பில் நளினி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்