மதுபோதையில் பயங்கரம்... வாகன விபத்தில் மனைவியை பறிகொடுத்த மருத்துவர்: சீமான் நேரில் ஆறுதல்

Report Print Arbin Arbin in இந்தியா
384Shares

கோவை மாவட்டத்தில் சாலை விபத்தில் மனைவியை இழந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் மருத்துவருமான ரமேஷின் குடும்பத்தாரிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி, கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே மதுபோதையில் கண்மூடித்தனமாக இரண்டுபேர் வந்த இருசக்கர வாகனம் மோதியதில்,

பள்ளியிலிருந்து தன் மனைவியை அழைத்து வந்துகொண்டிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் மருத்துவருமான ரமேஷின் மனைவி ஷோபனா கொல்லப்பட்டார்.

மகள் சாந்தலா தேவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக்கால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாகவும் ஷோபனாவின் மரணத்துக்கும் அந்த டாஸ்மாக்கில் மது குடித்துவிட்டு வந்த இளைஞர்கள் போதையில் ஏற்படுத்திய விபத்துதான் என்றும் அந்தப் பகுதி மக்கள் குமுறியுள்ளனர்.

இதனையடுத்து தனது மனைவியின் சடலத்தோடு அந்த டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தியுள்ளார் ரமேஷ்.

இதையடுத்து அந்தப் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தக் கொடூர சம்பவத்தால் நிலைகுலைந்துபோன குடும்பத்தை இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்