அருண் ஜெட்லி கவலைக்கிடம்...! டெல்லி எய்ம்ஸில் பரபரப்பு; குவியும் தலைவர்கள்

Report Print Basu in இந்தியா

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி (66), கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின் அவரால் தீவிர அரசியலில் இருந்து விலகிக்கொண்டார்.

கடந்த 9-ம் திகதி மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தற்போத வெளியாகி உள்ளன.

எனினும் எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஊடக வாகனங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியே சூழ்ந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியுஷ் கோயல், ஹர்ஷ் வர்தன் உட்பட தேசிய தலைவர்கள் பலர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக் கு விரைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்