அத்தை கெராசின் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க - 5வயது சிறுமியின் அதிரவைக்கும் வாக்குமூலம்

Report Print Abisha in இந்தியா

மனைவியிடம் கணவன் முத்தலாக் தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டதில் மனைவியை குடும்பமே சேர்ந்து தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேஷம் மாநிலத்தை சேர்ந்தவர் நபீஸ் அவரது மனைவி சாயிஷா. நபீஸ் மும்பையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவனின் குடும்பத்தாருக்கு சாயிஷாவை பிடிக்கததால் நபீஸ் சில தினங்களுக்கு முன் முத்தலாக் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்பு தெரிவித்த சாயிஷா, பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொலிசார் நபீஸ் சொந்த ஊர் திரும்பியதும் காவல் நிலையம் வரும்படி கூறியுள்ளனர். இரு தினங்களுக்கு முன் சொந்த ஊர் வந்த நபீஸ்க்கு சாயிஷாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த நபீஸ் சாயிஷாவை அடித்துள்ளார், அவரது சகோதரி கெராசின் ஊற்ற, நபீஸ்ன் தாயார் தீக்குச்சி வைத்து பற்ற வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனை நேரில்பார்த்து கொண்டிருந்த சாயிஷாவின் 5வயது மகள் பாத்திமா நடந்தவற்றை மழலை மொழியில் கூறியது பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படத்தி உள்ளது.

தற்போது, தலைமறைவான குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...