மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவியுடன் எனக்கு என்ன உறவு தெரியுமா? அதிரவைத்த இளைஞர்

Report Print Raju Raju in இந்தியா
881Shares

நிர்மலாதேவிக்காக அவரது ரசிகர் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளை பாலியல் தொடர்பான தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி சிக்கினார்.

இவர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அவர் தொடர்ந்து ஆஜராகி வருகிறார்.

அதன்படி நேற்று விசாரணைக்கு வரவேண்டிய நிர்மலாதேவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விடுப்பு மனு அளித்துள்ளார்.

இதையடுத்து, இவ்வழக்கின் மறுவிசாரணை செப்டம்பர் 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நிர்மலாதேவியின் தீவிர ரசிகர் அன்பழகன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நிர்மலாதேவி எப்போதெல்லாம் நீதிமன்றத்துக்கு வருவாரோ, அப்போதெல்லாம் அவரை பார்க்க அங்கு வந்துவிடுவார்.

பொலிஸ் வாகனத்தில் இருந்து இறங்கி நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் வேனில் ஏறி கிளம்பி செல்லும்வரை அவர் அங்கேயே நின்று நிர்மலாதேவியை பார்த்து கொண்டே இருப்பார்.

நான் நிர்மலாதேவியின் தீவிர ரசிகர், அவர் மீது எந்த தவறும் இல்லை. அவரை பற்றிய செய்தியை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் தான் வரும், அவர் எனக்கு சகோதரி என அன்பழகன் ஏற்கனவே கூறினார்.

இந்நிலையில் இன்றும் நிர்மலாதேவி நீதிமன்றத்துக்கு வந்திருப்பார் என்று நினைத்து வந்திருந்தார் அன்பழகன்.

ஆனால் அவர் வராததால், ஏமாற்றம் அடைந்த அன்பழகன், ஏற்கனவே நிர்மலாதேவி தியானம் செய்த இடத்தில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார்.

நிர்மலாதேவி இல்லாததால் அவருக்காக தியானம் செய்கிறேன் என அவர் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்