கைதாகிறாரா ப.சிதம்பரம் ? வீட்டிற்கு விரைந்த சிபிஐ அதிகாரிகள்

Report Print Arbin Arbin in இந்தியா

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்ய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது.

இதில் முறைகேடு நடந்து என கூறி அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதையடுத்து இருவர் மீதும் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை மட்டும் தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு முன் ஜாமின் கோரி மனு அளித்திருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

ஆனால் இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு சிதம்பரம் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தன.

இந்நிலையில் முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த 2 மனுக்களையும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வலியுறுத்தியது.

மேல்முறையீடு செய்ய ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 3 நாள் அவகாசம் அளித்துள்ளது.

இதனிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

ஆனால் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாத நிலையில் அதிகாரிகள் திரும்பி சென்றதாக டெல்லி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers