குளியலறை வழியாக... ஆடைகள் விலகிய நிலையில் சடலமாக கிடந்த மனைவி.. வழக்கில் அதிரடி திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை பொலிசார் பல இடங்களில் தேடி வந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்த அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள பனப்பாளையம் - பெத்தாம்பாளையம் சாலையில் ஒரு காட்டுப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரு வாரங்களுக்கு முன்னர் முகம் சிதைக்கப்பட்டு, ஆடைகள் விலகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் சுகன்யா (25) என்பது தெரியவந்தது.

மேலும் 9 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த இமானுவேல் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி அவர் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இமானுவேலுக்கு கஞ்சா பழக்கம் இருந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சுன்யாவின் நிலையை அறிந்த பெற்றோர் சுகன்யா குடும்பத்தை அருகிலேயே குடி வைத்தனர்.

கடந்த 3 மாதத்துக்கு முன்பு சுகன்யாவை மயக்கம் அடைய செய்து விட்டு இமானுவேல் அவர் அணிந்திருந்த நகை மற்றும் மொபட்டை திருடிச்சென்றார்.

சில நாட்கள் தொடர்பு இல்லாமல் இருந்த இமானுவேல் மீண்டும் சுகன்யாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பல்லடம் மகாலட்சுமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனது பெற்றோருடன் இமானுவேல் வசித்து வந்தார்.

சேர்ந்து வாழ்வது குறித்து சுகன்யாவிடம் பேச கடந்த 31ஆம் திகதி இமானுவேல் அழைத்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் மொபட்டில் புறப்பட்டார். இமானுவேலுவை சுகன்யா சந்தித்த பின்னர் இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் இமானுவேல் மனைவி சுகன்யாவை கொலை செய்து முகத்தை கல்லால் சிதைத்தது தெரியவந்தது.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து இமானுவேலுவை தேடி வந்தனர்.

இமானுவேலுவின் பெற்றோர் சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டு உரிமையாளர் இமானுவேல் தங்கிருந்த வீட்டுக்கு பூட்டு போட்டார்.

இந்நிலையில் நேற்று அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இமானுவேல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெளியில் பூட்டிய வீட்டுக்குள் குளியல் அறை வழியாக இமானுவேல் நுழைந்தது தெரியவந்த நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...