சாதிய தீண்டாமை.. பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்கப்பட்ட பூத உடல்; வலி மிகுந்த காட்சி

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் சாதி தீண்டாமை கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், இறந்தவரின் உடலை சுமந்த வந்த உறவினர்கள், பாடையில் கயிறு கட்டி பாலத்தின் மீது இருந்த கீழே இறக்குகின்றனர். கீழே இருக்கும் நபர்கள் பாடையை பிடித்து சுமந்து செல்கின்றனர்.

இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின் படி, வேலூரில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இறந்த நபர் தலித்து என தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாயனத்திற்குள் நுழையும் வழி சில உயர் சாதியினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் பண்ணை நிலம் வழியாக உடலை எடுத்து செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

எனவே, தலித்துகளுக்கு மயானத்தை அணுக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் பாலத்திலிருந்து கயிறுகளால் உடலை இறக்கி இறுதி சடங்கு செய்துள்ளனர். குறித்த காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்